தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் உயரத்திலிருந்து பாயும் விளையாட்டு அறிமுகம்.

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாகவும், மலைத்தொடர்களையும் கொண்ட இடமாக மத்திய மலைநாடு காணப்படுகின்றது. அதிலும் நுவரெலியா சிறந்த சுற்றுலா இடமாக காணப்படுகின்றது.

அந்த வகையில் நுவரெலியாவில் உயரத்திலிருந்து பாயும் விளையாட்டுத் தொகுதியினை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

குறித்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது அவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு தேவையான கடன் வசதியினை பெற்றுக் கொள்வதற்காக குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் வசதியினை பெற்றுக்கொள்வதற்காக கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments
Loading...