தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் உள்ள தமது பிரஜைகளிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா….

இலங்கை  வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால் அங்கு  செல்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இன்று நாடாளுமன்றத்திற்கு அருகில்  பாரிய போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால்  தமது பிரஜைகளிற்கு இந்த  எச்சரிக்கையை  விடுப்பதாகவும்  அமெரிக்கா கூறியுள்ளது.

நாட்டின்  புதிய பிரதமராக  பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை ஜனாதிபதி பிரதமராக்கியுள்ளமை, அரசியலமைப்புக்கு முரணானது என  ஐக்கிய தேசிய கட்சி கூறிவருகின்றது.

இதன் காரணமாக  நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ச நிரூபிக்க வேண்டும் என ஐ. தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு  நீடிக்கும் அரசியல் ஸ்தீரமன்ற நிலைமை காரணமாக சிவில் வன்முறைகள், பணிப்பகிஷ்கரிப்புகள் மற்றும் போராட்டங்கள் அதிகரிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பேரணிகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டாலும் அவை மோதலாக மாறி, வன்முறைகள் ஏற்படலாம் எனவும்  அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு  அறிவுறுத்தியுள்ளது

மேலும் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும்,  ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறும் அமெரிக்கா தமது பிரஜைகளிற்கு   மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...