Designed by Iniyas LTD
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
