Designed by Iniyas LTD
இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…
இலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 691 பேர் எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.