தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் தமிழக மீனவர்களின் காவல் ஜூலை 17ம் தேதி வரை நீட்டிப்பு

இலங்கை கடல்பகுதிfishயில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் 14 பேரின் காவலை ஜூலை 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வவுனியா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் கோடியேக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்கி, மீன்படி சாதனங்களையும் கொள்ளையடித்து சென்றதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments
Loading...