தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் நேற்றிரவு(05) முதல் மீண்டும் முடக்கப்பட்டுள்ள சமூக ஊடகங்கள்.

இலங்கையில் நேற்றிரவு(05) முதல் சமூக ஊடகங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பில் நேற்றுப் பிற்பகல் முச்சக்கரவண்டிச் சாரதிகள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் இரண்டு இனங்களைச் சேர்ந்த குழுக்களுக்கிடையிலான மோதல்களாக உருவெடுத்தது.

இந்தசம்பவத்தில் சில முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டதுடன் சில உந்துருளிகள் தீயிட்டு எரி்க்கப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.

இந் நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் விமானப்படையினர் கஅங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும், படங்களும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய நிலையில் நேற்றிரவு முதல் சமூக ஊடகங்களின் மீது மீ்ண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , முகநூல்,இன்ராகிராம்,வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் நேற்றிரவு முதல் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...