Designed by Iniyas LTD
இலங்கை அதிபருக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் -மீனவ அமைப்பு
தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வரும் இலங்கை அதிபருக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் வரும் சட்டமன்றத் தேர்தலை புறகணிக்கப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று ராமநாதபுரம் மாவட்ட விசைபடகு மீனவர் சங்கத்தலைவர் அல்போன்ஸ் தலைமையில் மீனவ அமைப்புகளின் அவசர ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இரு நாட்டுமீனவர்களின் பேச்சுவார்ததையில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் இலங்கை அதிபர் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிவருவதற்கு மத்திய மாநில அரசுகள் கன்டணம் தெரிவிக்கவில்லை இதற்கு இந்தக் கூட்டத்தின வாயிலாக கன்டனம் தெரிவிப்பது.
எனவும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பிற்கு உரிமையை பெற்றுத்தராத நிலையில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் திறும்ப பெற்றுத்தர வேண்டும், மேலும் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும்மின்பிடி தெரிழலாளார்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்வதோடு அரசு எங்களது படகுகைள எடுத்தக் கொன்டு அதற்காண நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனவும், நேற்று சிறை பிடிக்கப்பட்ட படகுகைளயும் மீனவர்களையும் உடனடியாக மீட்டுத்தரவும் ஏற்கனவே மீட்கப்படாமல் உள்ள படகுகளை மீட்டுத்தர வழியுறுத்தியும் வரும் 10ந் தேதி ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியிலிருந்து கைகளில் திருவோடு ஏந்தி போரணியாகச் சென்று தபால்தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்துவது எனவும், எங்களது பிரச்சணைகளுக்கு அரசு தீர்வுகானப்படாத நிலையில் வரும் சட்டமன்றதேர்தலை புற்கணிப்பதோடு தமிழகத்தின் 13 மீன்பிடி மாவட்ட மீனவர்களையும் புற்கணிக்கச் செய்வது எனவும் இன்று அவசர கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.