தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக வரையப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது…

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக வரையப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

கடந்த-1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

88 பக்கங்களைக் கொண்ட குறித்த  சட்ட மூலத்தை  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வர்த்தமானி ஊடாக வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த  சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

தீவிரவாதம் மற்றும் ஏனைய அதற்குத் துணையான நடவடிக்கைகளிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும்  கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளினால் எவருக்கேனும் மரணத்தை ஏற்படுத்தியிருந்தால் குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனையை வழங்குவதற்குப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஒரு சந்தேக நபரை 6 மாதங்களுக்கும் மேல் தடுத்து வைத்திருக்க முடியாது எனவும்,

அதற்கு மேல் ஆறுமாதங்கள் தடுத்து வைத்திருக்க வேண்டுமானால் சட்டமா அதிபரின் விண்ணப்பத்தின் பேரில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஆணையைப் பெற வேண்டும் எனவும் குறித்த டச்சமூலத்தில் குறிப்பிடப்படுள்ளது.

இதேவேளை இந்த புதிய சட்டமூலத்தின்படி ஜனாதிபதி,  நாடு முழுவதற்கும் அல்லது ஒரு பகுதியில் இலங்கையின் கடல் மற்றும் வான் பரப்புகளில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்க முடியும் எனவும் தெரிவிகபப்டுகின்றது.

எனினும் எந்தவொரு ஊரடங்கு உத்தரவும் அதிகபட்சமாக 24 மணி நேரத்தை தாண்டக் கூடாது என்றும்,  ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 3 இலட்சம் ரூபாவுக்கு மிகையாகாத அபராதம் விதிக்க முடியும் எனவும் இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...