Designed by Iniyas LTD
இலங்கை அரசாங்கம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்
SLMDI(sri lanka muslim diaspora initiative) uk அமைப்பினருக்கும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களுக்குமான சந்திப்பு இடெம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்களின் அழைப்பின் பெயரில் இடெம்பெற்ற இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்க தவறியுள்ளது என்பதை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகரவிடம் SLMDI UK சுட்டிக்காட்டியது.

இச்சந்திப்பு 08.08.2019 அன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடெம்பெற்றது. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியுள்ளது என்பதை கடந்த கால சம்பவங்கள் தெளிவாக காட்டியுள்ளது.இந்த நிலைமை தொடருமாக இருந்தால் SLMDI UK அமைப்பானது சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிவரும் என்பதை மேற்படி சந்திப்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் மூலமாக இலங்கை அரசாங்கத்திற்கு கூறியுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினையும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மூலமாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.இந்த சந்திப்பில் அமைப்பின் தலைவர் அவர்கள் உட்பட அதன் முக்கிய உறுப்பினர்களும் பங்குபற்றினர்.