தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அரசினால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மகஜர் ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியிடம் கையளிப்பு

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மற்றும் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு சம்பந்தமான மகஜர்களை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியிடம் உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ராகுலன் கையளித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியை கொழும்பில் சந்தித்த உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ராகுலன் மற்றும் அவரது குழுவினர் ஐ.நா. தொண்டர் அமைப்பின் ஊடாக காணாமலாக்கப்பட்டோருக்கான மற்றும் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு சம்பந்தமான மகஜர்களை கையளித்தார்.

இதே வேளை ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வட பகுதி முழுவதும் பூரண ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...