Designed by Iniyas LTD
இலங்கை இராணுவம் அரசாங்கத்திற்கு கீழ்ப்படிய மறுக்கின்றது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு…
இலங்கை இராணுவம் காணிகள் விவகாரத்தில் அரசுக்கு கீழ்ப்படிய மறுப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் செயிட் ராட் அல் ஹுசேன் ‘தி எகொனொமிஸ்ட்’ இதழில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்ததாகவும், தமது காணிகளை இராணுவத்திடம் இழந்தவர்கள் இன்னமும் பெரும்பாலும் அடிப்படை வசதிகளின்றி மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள மக்களின் நிலங்களையும், சொத்துக்களையும் விடுவிப்பதில் அரசாங்கம் உறுதியாகவிருந்தாலும் கூட இராணுவம் கீழ்ப்படிய மறுக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக ,அப்பாவி மக்கள் தொடர்ந்தும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.