Designed by Iniyas LTD
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 9 இந்திய மீனவர்கள் கைது…
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு ,அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று இரவு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மீனவர்களை யாழ்.நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளது.