Designed by Iniyas LTD
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்கள் நால்வரை பாகிஸ்தான் பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் லக்ஷர் பகுதியில் வைத்தே இன்று அதிகாலை இவர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக லக்ஷர் நகரில் இருந்து கடாபி மைதானத்திற்கு செல்லும் வழியில் இந்த பயங்கரவாத தாக்குதல் இலங்கை அணியினர் சென்ற பஸ் மீது மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இலங்கை அணி வீரர்கள் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது