Designed by Iniyas LTD
இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டது – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் …
சீனாவுடனான உடன்பாட்டின் விளைவாக, இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டதாக , அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவகத்தில், உரையாற்றியபோதே அவர் இதனை வெளிப்ப்டுத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக, சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உடன்பாட்டையே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவகத்தில், உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், சீனாவிடம் கடன் பெற்ற சில நாடுகள், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கவலையடைந்துள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்..
அந்தவகையில் இலங்கையும் தமது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற பிரச்சினைகள் குறித்து விரைவில், சீன பாதுகாப்பு அமைச்சருடன் நடத்தவுள்ள சந்திப்பின் போது வெளிப்படையாகப் பேசுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.