Designed by Iniyas LTD
இலங்கை நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு ஒரு தொகை இலங்கை நாணயத்தாள்களை கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சிங்கப்பூருக்கு செல்ல முற்பட்டபோதே குறித்த நபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நபரின் பயணப் பொதியை சோதனையிட்டபோது, சுங்க அதிகாரிகள் ஒரு தொகை இலங்கை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதுடன் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை – தம்பலாகம் பிரதேசத்தை சேர்ந்த சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பயணியாற்றிய 46 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரின் பயணப்பொதியிலிருந்து சுமார் 48 இலட்சத்து 99 ஆயிரம் ரூபா பெறுமதியான 1000 ருபா நாணயத்தாள்கள் மற்றும் 5000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றியுள்ளனர்.


