Designed by Iniyas LTD
இலங்கை வருகின்றார் பிரித்தானிய அமைச்சர்!
பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு வரவுள்ளார்.
தமது பயணத்தின்போது அவர், நல்லிணக்கம், கண்ணிவெடியகற்றல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் என்பவை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் தமது பயணத்தின்போது, வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இதனைதவிர போரின் போது காணாமல் போன தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை மக்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதன்போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பான நிலைப்பாடுகளை அவர், அறிந்து கொள்ளவுள்ளார் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமது பயணத்துக்கு முன்னர் கருத்துரைத்துள்ள மார்க் பீல்ட்,
இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்களுக்கு பிரித்தானியா தமது வரவேற்பை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.