தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இளைஞர்களின் எழுச்சி நாளாக அப்துல்கலாம் பிறந்த தினம்!

abdul_kalaam-450x254குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 85-வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் பிறந்து, ஏழ்மை நிலையில் நன்றாக படித்து, பின்னர் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து சாதித்த, டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதர்ச நாயகனான அப்துல் கலாமின் பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இதனையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகளும், பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் அப்துல் கலாமின் புகைப்படங்களை வைத்து இளைஞர்கள் மலர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

Comments
Loading...