தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏழு மாடி கட்டிடம் தரைமட்டமானது

பாலஸ்தீனத்தில் உள்ள ராஃபா நகரின் மீது இன்று காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏழு மாடி கட்டிடம் தரைமட்டமானது. மேலும் 2 அடுக்கு வணிக வளாக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது.bmich1

காசாவில் உள்ள 44 அடுக்கு மாடி குடியிருப்புகளை கொண்டு 12 மாடி கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில் ராஃபா நகரின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிங்கள் மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த வாரம் முதல் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த மக்களை அங்கிருந்து காலி செய்யுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்து வந்த நிலையில் இன்று மிகப்பெரிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இஸ்ரேல் மீது காசாவில் இருந்து 10க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து மேலும் ஐந்து ராக்கெட்டுகள் மூலம் வடக்கு இஸ்ரேலில் உள்ள காலியிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எகிப்து நாடு, தற்போது இரு தரப்பும் தாங்களாகவே மறைமுக பேச்சு நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...