Designed by Iniyas LTD
இ.போ.சபையினர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று (04.01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.
ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும்,
இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம்.
இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனியார் பேருந்து சேவைகள் மக்களுக்கான சேவைகளை வழங்கிவந்த நிலையில் சற்று முன்னர் முல்லைத்தீவு சாலை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு கொக்கிளாய் வழித்தட பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளது





