Designed by Iniyas LTD
ஈராக் கார் குண்டுவெடிப்பில் 9 பேர் பலி!
ஈராக் தலைநகரான பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறிதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. எனினும், இந்த தாக்குதல் நடந்திருக்கும் விதத்தை வைத்து பார்க்கையில் இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கும் என நம்பப்படுவதாக ஈராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மூன்றாம் தேதி இங்குள்ள கர்ராடா மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இதேபாணியில் நடத்திய கார் குண்டு தாக்குதல்களில் 292 பேர் பலியானது நினைவிருக்கலாம்.