Designed by Iniyas LTD
ஈரானில் ஆண் வேடத்தில் கால்பந்து பார்த்த பெண்கள்!
முஸ்லிம் நாடான ஈரானில் கடந்த 1979ம் ஆண்டில் இருந்து மைதானத்துக்கு சென்று விளையாட்டுப் போட்டியை காண பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் அஷாடி மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது.
அதைத் தொடர்ந்து 8 இளம் பெண்கள் ஆண்கள் உடை அணிந்து மாறு வேடத்தில் சென்றனர். விளையாட்டு மைதான வாசலில் சென்ற போது அவர்களை பாதுகாவலர் அடையாளம் கண்டு கொண்டார். அதை தொடர்ந்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.