Designed by Iniyas LTD
ஈரானில் 50 பயங்கரவாதிகள் கைது: புலனாய்வுத்துறை அமைச்சு அறிவிப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அண்மையில் இடம்பெற்ற இரட்டை பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
தாக்குதலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு செயற்பாடுகளின் ஒரு அங்கமாக, சில பயங்கரவாதிகளின் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புலனாய்வுத்துறை அமைச்சு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெர்மேன்ஷா, குர்திஸ்தான், மேற்கு அஜர்பைஜான் மற்றும் தெஹ்ரான் ஆகிய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இரட்டை பயங்கரவாதத் தாக்குதலில் 17 பேர்வரை உயிரிழந்ததுடன், சுமார் 50 பேர்வரை படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.