Designed by Iniyas LTD
ஈழத்தமிழர்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடுக்குமாரு ட்ரம்பிடம் கோரிக்கை!
ஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்குள் இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்பிடம், புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர்.
அவசர மகஜர் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கை ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இராணுவத்தினரால் 145000 தமிழர்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்குமாறும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.