Designed by Iniyas LTD
ஈழத்தாய் பார்வதி அம்மாளின் 3ம் ஆண்டு வணக்க நாள் !!!
பார்போற்றும் பார்வதிதாயே….!!!

அன்னையே
அழியா புகழ் கொண்ட அற்புதமே!
மானமுள்ள தமிழனுக்கெல்லாம் நீயே அன்னை
வேலுப்பிள்ளையின் சீமாட்டியே
தமிழ் வீரத்தின் விளைநிலமே.முந்தித் தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து
விடுதலைக்காய் வீரமகனை பெற்ற
வீரமகளே. நீ வேங்கைத்தாய்.
நீரையும் நெருப்பையும் நிழலாக்கி
நிமிர்ந்து நின்ற நாயகியே தாயாய்
நின்று தீயாய் ஆனவளே. காலன்
உனை எப்படி கவர்ந்திட்டான்.
உன் நினைவுகள் என்றும் வாழும்.
அன்னையே ! பார்போற்றும் பார்வதியே.
பாரம்மா உனையிழந்து தவிக்கிறோம் நாமம்மா.
பார்வதி இது தாயின் பெயரல்ல.
ஒரு பெருநெருப்பை பெற்றெடுத்த தீயின் பெயர்.
புதியதோர் வரலாற்றை பெற்றெடுத்த எம்தாயே !
மரணம் நெருங்கிடினும் வீரமாய் சாய்ந்தாயே.
எம்மை நிமிரவைத்த தலைவனை உலகிற்கு தந்தவளே.
வணங்குகிறோம் தலை தாழ்த்தி.
ஒருநாளும் ஓயமாட்டோம்
தமிழீழம் கிடைக்கும் வரை
உண்மையாய் உரைக்கிறோம்.
உம் கனவும் எம் கனவும்
உறுதியாய் உண்மையாகும் !
ஆக்கம்
ரா.கிரிஜா