தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத்து எழுச்சிப்பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியை நாளை(28.02.2017)!

unnamed-165-450x270தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது ஜம்பத்தேழாவது வயதில்     உயிரிழந்தார். 
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் அவர்களின் உடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை6மணி தொடக்கம் இரவு11மணி வரை யாழ்ப்பாணம் இன்பம் மண்டபத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது .

பின்னர் அன்னாரின் புகழ் உடல் மாங்குளம் எடுத்துச்செல்லப்பட்டு  இன்று திங்கட்கிழமை நண்பகல் வரை வைக்கப்பட்டு  பின்னர் மாங்குளம் மகாவித்தியாலய  மைதானத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னாரின் புகழ் உடல் கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில்  மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நாளை செவ்வாய் கிழமை மாலை 2 மணிக்கு இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ளதாக அறியமுடிகிறது.  

Comments
Loading...