தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத்து தமிழர்களின் கலை வடிவங்கள் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் – த.குருகுலராஜா

ஈழத்து தமிழர்களின் கலை வடிவங்கள் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கோரிக்கை விடுத்தார்.   வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  kurukula

யுத்ததின் காரணமாக ஈழத்தமிழர்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் அழிவடைந்து வருகிறது .இதனை கட்டிக் காப்பாற்ற எமது இளம் சமுதாயம் தயாராக இல்லை.   எனவே எங்களுடைய கலை பண்பாட்டு அம்சங்கள் எமது எதிர்காலத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் இல்லை என்றால் எங்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் விரைவாக அழிந்து விடும்.

இதனை கட்டிக் காப்பாற்றும் முயற்சியின் முதற்கட்டமாக இன்றைய தினம் மூத்த கலைஞர்களை அழைத்து கலந்துரையாடப்பட்டது அதில் மறைந்திருக்கின்ற எமது வரலாறுகள், கலை அம்சங்கள் பண்பாடுகள் போன்றவற்றை எப்படி காப்பாற்றலாம் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பவை தொடர்பாக ஆராயப்பட்டன.   எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் ஈழத்தமிழர்களின் அழகிய நிலை எனும் தொனிப்பொருளில் முழுநாள் கருத்தரங்கு ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று  வருவதாக அவர் தெரிவித்தார்.

Comments
Loading...