தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழ அகதிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறியதால் பரபரப்பு!!

TIRUNELVELI-450x254நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், கலைஞர் காலனியில், 43 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 34 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையின் பேரில் கடந்த 2014ம் ஆண்டு 2 சென்ட் இடம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.

இதில் ஒரு குடும்பம் மட்டும் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டியது. மற்ற குடும்பத்தினர் வறுமையின் காரணமாக வீடு கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் வீடு கட்டுவதற்கான காலம் கடந்ததாக கூறி அங்குள்ள 33 பேரின் வீட்டுமனை பட்டாவை வருவாய்துறையினர் ரத்து செய்தனர்.

மேலும் சில தினங்களுக்கு முன் வருவாய் துறை ஊழியர்கள் அங்கு சென்று , 28ம்தேதி மாலைக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

இதையடுத்து அங்குள்ள 10 குடும்பத்தினர் நேற்று இரவு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குடியேறினர்.

தகவலறிந்து வந்த வருவாய்துறை ஊழியர்கள், குழந்தைகளோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் வீடுகளை யாரும் காலி செய்ய வேண்டாம் என்றும் ரத்து செய்த பட்டாக்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறும் கேட்டு கொண்டனர்.

Comments
Loading...