தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழ அகதிகள் 20 பேர் தாயகம் திரும்புகின்றனர்!

returned-to-sri-lankan-refugeeஅக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தி­னு­டைய வச­திப்­ப­டுத்­த­லு­டனும் ஒருங்­கி­ணைப்­பு­டனும் இரு­பது ஈழத்  தமிழ் அக­திகள் தமிழ்­நாட்­டி­லி­ருந்து எதிர்­வரும் 26ஆம் திகதி இலங்­கைக்கு வருகை தர­வுள்­ளனர். இவர்கள் சென்­னை­யி­லி­ருந்து மிஹின் லங்கா விமான சேவை­யூ­டாக மு.ப. 11.05 மணி­ய­ளவில் வருகை தர உள்­ளனர்.
இலங்கையின் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் சுவா­மி­நா­தனின் முயற்­சியால் தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்சும் மிஹின்­லங்கா விமா­ன­சேவை நிறு­வ­னமும் அவர்­க­ளது பய­ணப்­பொ­தியின் அள­வையும் அதி­க­ரித்­துள்­ளன.
இவ் அக­திகள் 20 பேரில் 10 ஆண்­களும் 10 பெண்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்கள் தாயகத்தின் திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு மீள்­கு­டி­ய­மர்­வ­தற்­காக வருகை தரு­கின்­றனர் என ஸ்ரீ சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கூறினார்.

 

Comments
Loading...