Designed by Iniyas LTD
ஈழ வரலாற்றில் சிறப்பு மிக்க நாள்!
இலங்கை அரசின் கீழ் உள்ள தமிழ் பொலிஸ் உறுப்பினர்கள்கூட சிங்கள பொலிஸ் உறுப்பினர்களாகவே நடக்கின்றனர். சிங்களத்தில் பேசி, சிங்களப் பாணியில் நடந்து சிங்களப் பொலிஸாகவே அதிகாரம் செய்கின்றனர். இதுவே ஸ்ரீலங்காவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய பொலிஸ் துறையின் நிலமை.
தமிழீழக் காவல்துறையினர்தான் ஈழத் தமிழ் மக்களின் காவல்துறையாக – தமிழ் சிவில் சமூகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர்களாகவும் உலகின் முன்னுதாரணமிக்க காவல்துறையாகவும் இருந்தனர்.
எதிர்காலத்தில் தமிழர் தேசத்தின் தமிழ் காவல்துறை உருவாக்கத்திற்கு தமிழீழக் காவல்துறையின் பரிமாணமும் அடையாளமும் ஒரு முன்னுதாரணம். 1991 நவம்பர்18அன்று பயிற்சியை முடித்த தமிழீழக் காவல்துறை நவம்பர் 19முதல் இயங்கத் தொடங்கியது.
-தீபச்செல்வன்
