தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பது பயனற்ற முயற்சி- அரசியலமைப்பு சட்ட நிபுணர் லால் விஜேநாயக்க

ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது தொடங்கி எப்போது முடிவடைகிறது? என உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பது பயனற்ற முயற்சி என அரசியலமைப்பு சட்ட நிபுணரான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிடும் போதே சட்ட நிபுணரான லால் விஜேநாயக்க இதனை கூறியுள்ளார்.

மேலும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது? எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும்,

19 ஆவது திருத்தச்சட்டத்தின் 30.2 பிரிவு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் தொடங்குவதாக கூறுகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Loading...