தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க

அன்றாடம் காலையிலிருந்து இரவு வரை நாம் எவ்வளவோ வேலைகளைச் செய்கின்றோம். சில நேரம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றோம், ஆனால் சில நேரம் சோர்வடைகின்றோம். இவ்வாறு சோர்வடைவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? என்றாவது நீங்கள் இதை சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? நீங்கள் எப்போதும் சோர்வை உணர காரணம் உங்கள் உடலில் ஸ்டாமினா மிகவும் குறைவாக உள்ளது என்றே அர்த்தம்.Vegetarian-Foods

உடலில் ஸ்டாமினா போதிய அளவில் இருந்தால் தான் உடலினுள் நடைபெறும் வழக்கமான செயல்பாடுகள் சீராக நடக்கும். ஸ்டாமினா இல்லாவிட்டால், எந்த செயலையும் செய்ய முடியாமல் நமக்கே நம்மீது ஒருவித எரிச்சல் ஏற்படும். ஸ்டாமினாவை அதிகரிக்க ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் ஸ்டாமினா சீரான அளவில் இருக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. உடலில் ஆற்றலை அதிகரிக்க கார்போஹைட்ரேட் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே உங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி உட்கொள்ளுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் குறிப்பிட்ட ஹார்மோர்களின் உற்பத்திக்கு உதவும். ஒருவர் வாழைப்பழத்தை உடற்பயிற்சி செய்யும் முன் உட்கொண்டால், நீண்ட நேரம் நன்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

காபி

காப்ஃபைன் ஏராளமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. காப்ஃபைன் என்னும் பொருள், மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி நம்மை சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யும். எனவே நீங்கள் சுறுசுறுப்பின்றி இருப்பது போல் உணர்ந்தால், ஒரு டம்ளர் காபியைக் குடியுங்கள்.

அவகேடோ

அவகேடோ என்னும் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது மற்றும் இது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜனை வழங்கி, உடலின் ஸ்டாமினாவை மேம்படுத்தும். ஆகவே முடிந்தால், தினமும் ஒரு டம்ளர் அவகேடோ மில்க் ஷேக் குடித்து வாருங்கள்.

முட்டை

முட்டை மிகவும் சிறப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். ஒருவர் தினமும் ஒரு முட்டையை உட்கொண்டு வந்தால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம். ஏனெனில் இதில் புரோட்டீன் அதிகமாக உள்ளுது மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

ஓட்ஸ்

இது மற்றொரு ஆரோக்கியமான காலை உணவு. ஓட்ஸில்கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதனை காலை உணவாக உட்கொண்டால், நாள் முழுவதும் உடலில் ஸ்டாமினா நீடித்து நிலைத்திருக்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற உணவும் கூட.

வேர்க்கடலை

வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயில் புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக உடலினுள் வினைப்புரியும் போது, உடலின் ஆற்றல் மேம்படுவதோடு, தசைகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Comments
Loading...