Designed by Iniyas LTD
உடல்நலக்குறைவால் நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார்!
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வினுசக்ரவர்த்தி சென்னையில் இன்று காலமானார். உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்ரவர்த்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
71 வயதான வினுசக்ரவர்த்தி 1977 முதல் தமிழ் திரையுலகில் நடித்து வந்தார். நடிகை சில்க் சுமிதா உட்பட சில நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் இவர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சிவகுமார் நடித்த வண்டிச்சக்கரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த வினுசக்ரவர்த்தி, ‘தேசிங்கு ராஜா’ படத்துடன் ஆயிரம் படங்களை நிறைவு செய்தார். கடைசியாக ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடித்திருந்தார்.