தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலககோப்பையை வெல்வோம் நெய்மர் உறுதி

கால் இறுதி ஆட்டத்தில் கொலம்பியா வீரர் ஜுனிகா மோதியதில் பிரேசில் வீரர் நெய்மரின் முதுகுத் தண்டு முறிந்தது. இதனால் நெய்மர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணம் அடைய 45நாள்கள் ஆகலாம் எனத் தெரியவந்துள்ளது.

அரை நூற்றாண்டுக்குப் பின் தங்கள் சொந்த மண்ணில் கோப்பை வென்று தரக் காத்திருந்த நெய்மரின் கனவு,இந்த காயத்தால் தகர்ந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில் “உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஆட வேண்டும் என்பது என் கனவு. அது இந்தமுறை முடியாது. ஆனால், உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவை எங்கள் வீரர்கள் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் முறையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

32_neymar3

Comments
Loading...