Designed by Iniyas LTD
உலகக்கிண்ண போட்டியில் விளையாடுவது சந்தேகம் – மைக்கேல் கிளார்க்
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டியில் விளையாடுவது சந்தேகம் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
கிளார்க் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வு இருந்து வருகிறார். இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்டில் சிறப்பு வர்ணனையாளராக பணியாற்றுகிறார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மைக்கேல் கிளார்க், ‘உலகக்கிண்ண கிரிக்கெட் தொடக்க ஆட்டத்திற்குள் என்னால் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் உடல்தகுதி பெற்று உலகக்கிண்ணத்தின் பெரும்பாலான போட்டிகளில் விளையாட தயாராகி விட முடியும்.
உலகக்கிண்ணத்தை பொறுத்தவரை 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று, பிறகு உடல்தகுதியுடன் இல்லை என்றால் விலகி விட முடியும்.
அந்த வீரருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை சேர்த்துக் கொள்ள ஐ.சி.சி.யின் தொழில்நுட்ப கமிட்டி அனுமதி அளிக்கும். இதன் அடிப்படையில் உலகக்கிண்ணத்துக்கான அணிக்கு தெரிவாளர்கள் என்னை தெரிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்