தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகக் கோப்பை குறித்த கோஹ்லியின் பேட்டி – ஆர்வத்தில் ரசிகர்கள்

இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணியின் அதிரடி ஆட்டம் இன்றும் தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வீராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:– இந்திய அணியில் இடம் பெற்றுள்ள புதுமுக வீரர் அக்ஷர் பட்டேல் திறமை வாய்ந்தவர் ஆவார். ஆல்–ரவுண்டர் பங்களிப்பில் உள்ளார். அவரது சுழற்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது.indsri

சரியான இலக்கை நோக்கி வீசுகிறார். அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டியிலும், கடந்த ஆட்டங்களிலும் அவரை பார்த்து இருக்கிறேன்.

கட்டாக் போட்டியில் முதல் 2 பந்தில் அவர் அடுத்தடுத்து சிக்சர் அடித்து பிரமிப்பை ஏற்படுத்தினார். அனைவரையும் தன்பக்கம் இழுக்கும் ஆற்றல் கொண்டவர்.

உலக கோப்பையை கருத்தில் கொண்டுதான் முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதிகமாக போட்டிகளில் விளையாடுவதால் காயம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க இந்த முடிவு மேற்கெள்ளப்பட்டது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. உலக கோப்பையில் இதே மாதிரி சிறப்புடன் வீசுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கை வீரர் தில்சான் கூறும்போது, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை மறந்து விட்டோம். 2–வது போட்டியில் நாங்கள் எழுச்சி பெறுவோம் என்றார்

Comments
Loading...