Designed by Iniyas LTD
உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் திறப்பு விழாவில் பெருமளவான மக்கள் பங்கேற்பு!
01.06.2016 ஞாயிற்றுக்கிழமை உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.பெருமளவான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வின் பொதுச்சுடரினை திருமதி இரத்தினசிறி அம்மா அவர்கள் ஏற்றி வைத்தார்.
பிரதம விருந்தினராக டி எல் மகாராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் TGT குமார் அவர்கள், மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் ஒப்பிலான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பொதுத்தூபிக்கு மலர் மாலையினை திருமதி டிலானி அவர்கள் அணிவித்தார். ஈகைச்சுடரினை முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் அவர்களின் தந்தை ஏற்றியதோடு மலர் மாலையும் அணிவித்தார்.
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் திருவுருவ படத்திற்கு திருமதி ஆதவன் (கடாபி) அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.
தியாகி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு.கபிலன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.
அன்னை பூபதி அம்மாவின் திருவுருவ படத்திற்கு திருமதி சுகிந்திரா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.
மேலும் தமிழீழ தேசியக்கொடியினை திரு சாம்ராஜ் அவர்களும், பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய காவல்துறை உறுப்பினர் திரு சுரேஷ் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் பெயர் பலகையினை சிறார்கள் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மேடை நிகழ்வுகளும் நடைபெற்றன. வரவேற்பு நடனம் ,டி எல் மகாராஜனின் சிறப்புரை மற்றும் திரு பாலா, ஒக்ஸ்போர்ட் நகரசபை உறுப்பினர் திரு மகாலிங்கம், மற்றும் சோபினா ஆகியோர் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து கவிதையினை திரு சிவசுப்ரமணியம் அவர்களும் கணக்கறிக்கையினை திரு குமார் அவர்களும் வழங்கினார்கள்.
தொடர்ந்து நன்றியுரையினை திரு.சங்கீதன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சுரேஷ் குழுவினரின் பாடலும் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் இனிதாய் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் டி எல் மகாராஜன் அவர்கள் உலகத்தமிழர் வரலாற்று மையத்திற்கு வந்த பின்னர் அங்கு வைத்து இயற்றி பாடிய பாடல் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தது.





