தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வணக்க நிகழ்வு!

மாதாந்த மாவீரர் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு பிரித்தானியா ஒக்ஸ்போர்டில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் 25.06.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில் பொதுச்சுடரினை மூத்த தேசிய செயற்பாட்டாளர் திரு தெய்வச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து  பிரித்தானிய கொடியினை திரு. நித்தியானந்தன் அவர்களும் , தமிழீழ தேசியக்கொடியினை  போராளி உத்தமன் அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மாவீரர் நினைவு கல்லறைக்கான ஈகைச் சுடரினை கடந்த 16.06.1991 அன்று வவுனியா பகுதியில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கபில் அவர்களின் மைத்துனி ஏற்றினார். ஈகைச்சுடரினை மாவீரர் தூயவன் ஐயா அவர்களின் புதல்வி திருமதி பானுமதி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கபாடல் இசைக்க மலர் வணக்கத்தினை மாவீரர் கோமகன் அவர்களின் மாமனார் திரு குரு அவர்கள் செலுத்தினார்.

மேலும் கவிதையினை திருமதி நிலா அவர்களும், மாவீரர் நினைவுரையினை திரு சங்கீதன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

Comments
Loading...