தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் வைகாசி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!

வைகாசி மாத மாவீரர் வணக்க நிகழ்வு  சிறப்பானதாகவும் அதே வேளை உணர்வு பூர்வமாக இம் முறையும் உலகத்தமிழர் வரலாற்று  மைய வளாகத்தில் திரு ரஞ்சன் மாமா தலைமையில் நினைவு கொள்ளப்பட்டது .

குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்த மாதம் மிகவும் முக்கியமானதாகவும் .அதே வேளை என்றுமே எவராலும் இலகுவில் மறந்து விடவோ அல்லது மறக்கடிக்கப்படவோ முடியாத பல்லாயிரக்கணக்கான உயிர்தியாகங்கள் தற்கெடைகள் இனப்படுகொலைகள் இடம் பெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் தாயகத்தில் மௌனிக்கப்பட்ட துயரமான மாதமாகும். எனவே எமது மூத்த தளபதிகள், துறைசார் பொறுப்பாளர்கள்  ,ஆயிரக்கணக்கான போராளிகள் உட்பட அந்த போரிளிகளையும் தாய் மண்னையும் இறுதி மூச்சுள்ள வரை நேசித்து இதே மாதத்தில் படுகொலைசெய்யப்பட்ட   பல்லாயிரக்கணக்ன தமிழ் மக்களையும் எங்கள் நெஞ்சங்களில் சுமந்து அவர்களுக்கான வணக்க நிகழ்வு இடம் பெற்றது .

இந்நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக பொதுச்சுடரினை பேராசிரியரும் ஒவியருமான திரு  புகழேந்தி ஐயா அவர்கள் ஏற்றி வைக்க பிரித்தானிய கொடியினை நாடுகடந்த அரசின் பாராளுமன்றஉறுப்பினர் திரு யோகி அவர்கள் ஏற்றிவைத்தார் தமிழீழ தேசிய கொடியினை தமிழர் கல்வி கலை பண்பாட்டு  நடுவத்தின் பொறுப்பாளர் திரு தமிழினியன் ஏற்றிவைத்தார்  தொடர்ந்து  பொது மாவீரர் கல்லறைக்கான சுடரினை பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க அதற்கான மலர் மாலையினை மேஐர் சேரனின் சகோதரியான பிரபாயிலினி அவர்கள் அணிவித்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கான நினைவு துாபிக்கான சுடரினை திரு குணா அவர்கள் ஏற்றிவைக்க அதற்கான மலர் மாலையினை திரு யோகி அணிவித்தார் .

அகவணக்கத்தை தொடர்ந்து நிகழ்வில்கலந்து கொண்ட மக்கள்  சுடரேற்றிமலர் அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து அரங்கில் இடம் பெற்ற நிகழ்வில் “தமிழர் இனப்படுகொலை” எனும் தலைப்பில் திரு இன்பனின் தலைமையில் கவி அரங்கமும் மாவீரர்  நினைவு இசையினை இளவல் புரட்சி கனபாரதி அவரின் கீபோட் (சுரப்பலகை) ஊடாக வாசித்தார் அத்துடன்” அம்மா உன்பிள்ளை உயிரோடு இல்லை “என்ற பாடலுக்கான நடனத்தினை மூன்று மாவீரர்களின் பேத்தியான கலைநிலா ராகுலன் அவர்கள் வழங்கினார் . புரட்சி கீதங்களை திரு சுரேஸ் , சிவா , மைக்கல் ஆகியேர் பாடினார்கள் .மாவீரர்களின் நினைவுரையினை திரு புரட்சி அவர்கள் ஆற்றினார் .

தொடர்ந்து இம் மாதம் தமிழர் கவ்வி கலை பண்பாட்டு நடுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஒவியக் கண்காட்சியில் ஒவியங்களை வரலாறாக வரைந்தவர்களுக்கான நினைவு கேடயங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது நினைவு கேடயத்தினை ஒவியர் திரு புகழேந்தியை  ஐயா அவர்கள் வழங்கி கெரவித்ததுடன் தமிழர் கல்வி கலைபண்பாட்டு நடுவத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார் .

அத்துடன் ஒவியர் பேராசிரியர்  புகழேந்தி ஐயா அவர்களால் எழுதப்பட்ட தமிழீழ வரலாற்று நூலினையம் .திரு  புகழேந்தி ஐயா அவர்களின் அவரது வரலாற்று நூலினையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கெண்ட “மாமனிதன்” சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் அவர்கள் வெளியிட்டு வைக்க சட்டவாளர் திரு கீர்த்தனன் அவர்கள் பெற்றுக் கொண்டார் .

அத்துடன் சிறப்புரையினை திரு புகழேந்தி  ஐயா அவர்கள் ஆற்றினார் .அத்துடன் மாவீரர் ஆத்ம சாந்திக்காக வளாகத்தில் உள்ள” அற்புத வினாயகர் “ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளும் இடம்பெற்று இம் மாத நினைவு வணக்க நிகழ்வு  மிக உணர்வெழுச்சியுடன் நினைவு கொள்ளப்பட்டது.

Comments
Loading...