Designed by Iniyas LTD
உலகின் அதிக வெப்பமான ஆண்டு 2015!
2015-ம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எல் நினோ பற்றி மேற்கொள்ளும் ஆய்வின் ஒரு பகுதியாக உலக வெப்பநிலை பற்றிய ஆய்வை அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளால் ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கினர். இந்த ஆய்வில் பூமியின் வெப்பநிலையை கணக்கிட தொடங்கிய பிறகு மிக அதிகம் வெப்பம் மிக்க ஆண்டாக 2015 ஆண்டு பதிவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1997-1998 ஆம் ஆண்டுகளில் எல் நினோ காலநிலையின்போது வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டுதான் மிக உயர்ந்த அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் எல் நினோவின் தாக்கம் 2016-ம் ஆண்டு வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூமியின் வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி உயர்ந்தால் உலகின் முக்கிய நகரங்களான லண்டன், நியூயார்க், சிட்னி ,ஷங்காய், ரியோடி ஜெனிரோ, மும்பாய் முதலானவை நீருக்குள் மூழ்கிவிடும் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.