Designed by Iniyas LTD
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தளவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ்.என்.225 ரக விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மலேஷியா – கோலாலாம்பூரில் இருந்து பாகிஸ்தான் – கராச்சி நகரிற்கு பொருட்ளை ஏற்றிச் சென்ற போதே இந்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பல் மற்றும் பணியாளர்களின் தேவை காரணமாக தரையிறக்கப்பட்டுள்ள குறித்த விமானம், நாளை காலை மீண்டும் கராச்சி நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த விமானம், 2 லட்சம் மெற்றிக் டொன் பொருட்களை ஏற்றிச் செல்ல கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது