தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி

உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியாக  வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி  ஆய்வாளர்கள்  அறியப்பட்டது.

கடந்த 1974-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள வீட் பெல்ட் பகுதியில் இந்த சிலந்தி  கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வாளர் பார்பரபி இந்த சிலந்தியை  கொண்டுவந்து ஆய்வகத்தில் வைத்து பராமரித்து வந்தார்,

இந்நிலையில் குறித்த  சிலந்திப் பூச்சி தனது 43-வது வயதில்  இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பேராசிரியர் லிண்டா மாசன்

இத்தகவலை ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் லிண்டா மாசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இதற்கு முன்பு மெக்சிகோவில் டிரான்டுலா என்ற சிலந்திப் பூச்சி 22 ஆண்டுகள் உயிருடன் இருந்து சாதனை படைத்தது.

டிரான்டுலா என்ற சிலந்திப் பூச்சியைவிட அதிக ஆண்டுகள் வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி   பூச்சி  உயிர்வாழ்ந்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...