தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக கபடி போட்டிகள் ஆரம்பம்

உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அக்டோபர் 22-ந்தேதி வரை இந்தப் போட்டி அங்குள்ள டிரான்ஸ் மைதானத்தில் நடக்கிறது.  உலக கோப்பை கபடி போட்டியில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

 ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், அமெரிக்கா, போலந்து, கென்யா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.  ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 19-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது.india-vs-south-korea

21-ந்தேதி அரை இறுதி ஆட்டங்களும், 22-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.  இன்றைய தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தென் கொரியா அணிகள் ‘ஏ’ பிரிவில் மோதுகின்றன.  2 முறை சாம்பியனான இந்தியா இந்த உலக கோப்பையில் வென்று ஹாட்ரிக் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. புரோ கபடி போட்டியில் விளையாடிய அனுபவம் இருப்பதால் இந்திய வீரர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா – தென்கொரியா மோதும் இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்தப் போட்டியை நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது.

 உலக கோப்பை கபடியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-  அனுப்குமார் (கேப்டன்), பிரதீப் நார்வில், ராகுல் சவுத்ரி அஜய் தாக்கூர், ஐஸ்வீர்சிங், தர்மராஜ், அமித் ஹுடா, மொகித்சிலார், சுரேந்தர் நாடா, சுர்ஜித் குமார், மன்ஜித் சிலார், நிதின் தோமர் சந்தீப்நார்வல், தீபக் நிவாஸ் ஹுடா பயிற்சியாளர்: பாஸ்கரன் காசிநாதன்.  இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஈரான் – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. 2 முறை 2-வது இடத்தை பிடித்த ஈரான் அணி வெற்றியுடன் கணக்கை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. இரவு 9 அணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

Comments
Loading...