தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக கிண்ண லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – தென் ஆப்பிரிக்க மோதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 341 ஓட்டங்கள் குவித்தது.

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று நடக்கும் உலகக்கிண்ண ‘பி’ பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் விளையாடுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற யு.ஏ.இ. அணித்தலைவர் முகமது தாகிர், களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஹசிம் ஆம்லா (12) ஏமாற்றினார். பின் இணைந்த குயின்டன் டி காக், ரோசோவ் ஜோடி நிதானமாக ஆடியது.south_emirates

இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ஓட்டங்கள் சேர்த்த போது குயின்டன் (26) ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரோசோவ் (43)ஓரளவு சிறப்பான ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து பொறுப்பாக ஆடிய டேவிட் மில்லர் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய அணித்தலைவர் டிவில்லியர்ஸ் (99) சதமடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

டுமினி (23) சொபிக்கவில்லை. கடைசி நேரத்தில் அசத்திய பெகார்டியன் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அணிக்கு கைகொடுத்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 341 ஓட்டங்கள் எடுத்தது. பெகார்டியன் (64), பிலாண்டர் (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் முகமது நவீது 3, முகமது தாகிர், அம்ஜத் ஜாவேத், கம்ரான் ஷாஜத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Comments
Loading...