தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக சமாதான அட்டவணை 2015: இலங்கைக்கு 114 ஆவது இடம்

Peace_Corps_UClub12_31712015 ஆம் ஆண்டிற்கான உலக சமாதான அட்டவணையில் இலங்கை 114வது இடத்தையும் மற்றும் இந்தியா 143வது இடத்தையும் பிடித்துள்ளன.  கடந்த வருடம் உலக சமாதான அட்டவணையில் இலங்கை 105 வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வருடம் ஒன்பது இடங்கள் பின்தள்ளப்பட்டு 114 வது இடத்தை பிடித்துள்ளது.

 இந்தியா கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் எந்தவித மாற்றங்களும் இன்றி 143 வது இடத்தில் உள்ளது. சிட்னி மற்றும் நியூயார்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம் இந்த புள்ளிவிவர அட்டவணையை தயாரிக்கிறது.

 162 உலக நாடுகளைக் கொண்டு ஆய்வுகள் செய்து இந்த அறிக்கை வருடந்தோரும் வெளியிடப்படுகிறது. இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. இதில் கடைசி இடம் சிரியாவுக்கு கிடைத்துள்ளது.

Comments
Loading...