Designed by Iniyas LTD
உலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது
உலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே 01ம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் ஏற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பௌத்த தலங்களுக்கு இடையூறுகளை விளைவிக்காத வகையில், உலக தொழிலாளர் தினத்தினை மே 01 ஆம் திகதியே கொண்டாட வேண்டுமென தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள்
யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறையிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை உள்ளடக்கியதாக வெள்ளாவெளிப் பிரதேச சபையின் விளையாட்டு மைதானத்திலும் தொழிலாளர் தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ள்ளார்.
அதோடு பௌத்த மகாநாயக்கர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்ததாக அமையாது என்றும் . அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக, இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்
இதேவேளை , 12 மணிக்குப் பின்னர் வர்த்தக, வியாபார உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி, தொழிலாளர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.