Designed by Iniyas LTD
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட சர்வதேசங்ளிற்கு அதிகாரம் இல்லை – கலாநிதி பாலித்த கொஹன …
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுக்கோ உரிமை கிடையாது என தெரிவிகபட்டுள்ளது.
இதனை ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவோ எச்சரிக்கை விடுக்கவோ அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு எமது ஜனநாயக நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களுக்கு பிரச்சினையாகி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.