Designed by Iniyas LTD
உள்ளாட்சித் தேர்தல் ரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனு :இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.