Designed by Iniyas LTD
உழவு இயந்திரம் தடம் புரண்டதில் கிளிநொச்சியில் இளைஞன் பலி…
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (28) காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை குறித்த உழவு இயந்திரம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதித்த போதும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.