Designed by Iniyas LTD
ஊடகங்கள் தங்கள் கட்சியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது -சீமான்
இந்திய மக்களவை தேர்தல் எதிர்வரும் 18 -ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக தீவிரமாக
பிரச்சாரம் நடந்து வருகிறது.
பல காட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இரு மாநிலங்களிலும் கூட்டணியில் இணையாமல் தனித்து நின்று போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வேட்பாளர் களுக்காகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
விகடனுக்கு தனியாக பேட்டியளித்த சீமான் , ஊடகங்களில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் பெயர்களை வரை கூறுகிறார்கள்.
ஆனால் எங்கள் கட்சி வேட்பாளர்களின் ஒருவரின் பெயரை சொல்வது கூட கிடையாது. இப்படி எங்க கட்சியை திட்டமிட்டு புறக்கணிக்கும் போது ஊடகங்களின் மீது கடுமையான கோபம் வருகிறதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடகங்கள் தங்கள் கட்சியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறதாகவும் தெரிவித்துள்ளார்.