தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 14 வது ஆண்டு நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 14 வது ஆண்டு நினைவு தினம் நேற்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அண்மையில் இயற்கை எய்திய ஊடகவியலாளர் ஜயா. சச்சிதானந்தனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு, அதன் தலைவர் த.வினோஜித் தலைமை தாங்கினார். ஈகை சுடரேற்றலுடன் ஆரம்ப நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு அவரது நண்பரும் மூத்த ஊடகவியலாளருமான ந.பரமேஸ்வரனும், ஜயா.சச்சியின் உருவப்படத்திற்கு ஊடக அமையத்தின் செயலாளர் கஜீபனும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

nimalarajan -event-jaffna

அதனை தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் மலரஞ்சலி செலுத்தினர். நிமலராஜன் தொடர்பான நினைவுரைகளினை சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் ந.பரமேஸ்வரன் மற்றும் இ.தயாபரன் ஆகியோர் ஆற்றியிருந்தனர். ஜயா.சச்சிதானந்தன் தொடர்பான அஞ்சலி உரைகளை அவரது நண்பரும் ஊடகக்கல்வி விரிவுரையாளருமான ஆ.சபேஸ்வரன் மற்றும் தினக்குரல் உதவி ஆசிரியர் ந.பொன்ராசா ஆகியோர் ஆற்றியிருந்தனர். மற்றொரு உதவி ஆசிரியரான ஜெயபாலன் ஊடக சுதந்திரம் வேண்டுமெனும் தொனி பொருளில் கவிதாஞ்சலி செலுத்தியிருந்தார். மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் நாளிதழ் ஆசிரியர் சிவகரன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.

Comments
Loading...